
சேலத்தில் பாமக ஆலோசனை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பேசிய அன்புமணி ராமதாஸ், ''தமிழகத்தில் வன்னியர்களுக்கு அதிக துரோகம் செய்த வன்னியர்களுக்கு அதிக துரோகம் செய்த முதலமைச்சர் யார் என்று சொன்னால் அது வரலாற்றில் மு.க.ஸ்டாலின் தான் என்று சொல்வார்கள். இப்போது நான் சொன்னது சாதாரண வார்த்தை கிடையாது. ஏனென்றால் எம்ஜிஆர் கூட ராமதாஸுக்கு நேரம் கொடுக்கவில்லை. ஆனால் அது அவருக்கு தெரியாது. அதன் பிறகு எம்ஜிஆரை சந்தித்த நேரத்தில் எம்ஜிஆர் ராமதாஸ் இந்த சமுதாயம் மிகவும் பின்தங்கி இருக்கிறது என பேசினார். 'ஐயையோ எனக்கு தெரியாமல் போய்விட்டதே டாக்டர். இப்படி இருக்கிறதா? இவ்வளவு மோசமாக இருக்கிறதா? யாருமே என்னிடம் சொல்லவில்லை' என்ற எம்ஜிஆர், அப்பொழுது அங்கே நின்று கொண்டிருந்த இரண்டு அமைச்சர்களை திட்டி விட்டார். அவர்கள் பெயரை சொல்ல விரும்பவில்லை. 'இவ்வளவு காலம் எனக்கு எப்படி தெரியாமல் போச்சு' என்ற எம்ஜிஆர், ராமதாஸிடம் சொன்னார் 'நிச்சயமாக நான் செய்கிறேன்' என்று சொன்னார். அதன் பிறகு 15 விழுக்காடு இட ஒதுக்கீடு தயார் பண்ணி வைத்தார்கள். அதன் பிறகு அடுத்த மாதம் எம்ஜிஆர் அமெரிக்கப் போனார். அதன் பின்னர் அவர் உடல்நிலை சரியில்லை இறந்து விட்டார்'' என்றார்.