‘ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை' சென்னை தலைமை செயலகத்தில் இருந்து தமிழக முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, காமராஜ், தலைமை செயலாளர் சண்முகம், பல்வேறு துறையைச் சேர்ந்த அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
'ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்' தமிழகத்தில் 32 மாவட்டங்களில் இன்று (01/10/2020) முதல் அமலுக்கு வந்துள்ளது. தூத்துக்குடி, தஞ்சை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் அக்டோபர் 16- ஆம் தேதி முதல் திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
சோதனை அடிப்படையில் ஜனவரி 1- ஆம் தேதி முதல் நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 'ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்' அமல்படுத்தப்பட்டிருந்தது.
இந்த திட்டம் மூலம் ரேஷன் கார்டு வைத்துள்ளோர் நாட்டின் எந்த மாநிலத்திலும் உள்ள ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.