நாகப்பட்டினத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை எம்.எல்.ஏ.வுமான மு.தமிமுன் அன்சாரி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், மஜக தலைமை நிர்வாகக்குழுவின் ஆலோசனைப்படி தனது ஒரு மாத எம்.எல்.ஏ. சம்பளத்தை கஜா புயல் நிவாரண நிதிக்கு நாகை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வழங்க இருப்பதாக கூறினார்.
நிவாரணப் பணிகள் குறித்த நடவடிக்கைகளுக்காக, அரசியல் வேறுபாடுகள், பேதங்களை கடந்து எல்லோரும் இணைந்து பணியாற்ற முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
. மஜக பேரிடர் மீட்புக் குழு சார்பில் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 1000-த்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், இதுவரை 20 ஆயிரம் பேருக்கு உணவு, பிஸ்கட், பால் பவுடர், மினரல் வாட்டர் என வினியோகம் செய்திருப்பதாகவும், 15 ஆயிரம் மெழுகுவர்த்திகள் வழங்கப்பட்டிருப்பதாகவும், ஜெனரேட்டர் மூலம் பல இடங்களில் மின்சார சேவை அளிக்கப்படுவதாகவும் கூறினார்.
பேட்டியின் போது மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை முபாரக், ஐ.டி. விங் மாவட்ட செயலாளர் சுல்தான், மாவட்ட விவசாய அணி செயலாளர் ஜலாலுதீன், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் பாரக், மஜக மாவட்ட பி.ஆர்.ஓ. தமீஜுதீன், சம்பத், முரளி, சேக் அலி ஆகியோர் உடன் இருந்தனர்.