Skip to main content

ஒருமாத ஊதியத்தை போனசாக வழங்க வேண்டும் ஜேக்டோ - ஜீயோ தொடர்முழக்கப் போராட்டம்

Published on 07/01/2018 | Edited on 07/01/2018
ஒருமாத ஊதியத்தை போனசாக வழங்க வேண்டும்
ஜேக்டோ - ஜீயோ தொடர்முழக்கப் போராட்டம்

உச்சவரம்பின்றி அனைத்து அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கும் ஒரு மாத ஊதியத்தை பொங்கல் போனசாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜேக்டோ - ஜீயோ சார்பில் புதுக்கோட்டையில் சனிக்கிழமையன்று தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.



ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை நீக்க வேண்டும். தன்பங்கேற்பு ஊதியத்தை ரத்துசெய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் தொடரவேண்டும். 21 மாத ஊதியக்குழு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியத்தை ரத்துசெய்துவிட்டு  அனைவருக்கும் முறையான கலமுறை ஊதியம் வழங்க வேண்டும். உச்சவரம்பின்றி அனைத்து ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கும் ஒரு மாத ஊதியத்தை பொங்கல் போனசாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சனிக்கிழமையன்று ஜேக்டோ - ஜீயோ சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது.

புதுக்கோட்டை திலகர்திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கே. நாகராஜன், ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்டச் செயலாளர் எம். ராஜாங்கம் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலத் தலைவர் தியோட்டர் ராபின்சன், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆ. மதலைமுத்து, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைப்பொதுச் செயலாளர் அ. செல்வேந்திரன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலச் செயலாளர் ஆர். தமிழ்ச்செல்வி, ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் ஆ. மணிகண்டன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

ஜாக்டோ-ஜீயோ அமைப்பின் மாவட்ட நிர்வாகிகள் க.கருப்பையா, ஆர்.ரெங்கசாமி, ரெங்கராஜ், கே.குமரேசன், எஸ். ராமச்சந்திரன், என். இந்திராணி, சதீஸ் சரவணன், கருப்பய்யா, மனோகரன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.

-இரா. பகத்சிங்

சார்ந்த செய்திகள்