நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது. இது தொடர்பான ஆய்வினை நடத்த மத்திய சட்ட அமைச்சகத்திற்கு உத்தரவிடப்பட்டது. ஒரே நாடு ஒரே தேர்தலை அதிமுகவின் எடப்பாடி தரப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்ட ஆணையத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தை மத்திய சட்ட ஆணையத்திடம் திமுக எம்.பி வில்சன் வழங்கியுள்ளார். அதேபோல் தொலைதூர வாக்குப்பதிவு எனப்படும் ரிமோட் வாக்குப்பதிவு தொடர்பான கருத்துக்கேற்ப கூட்டத்தில் திமுக தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ரிமோட் வாக்குப்பதிவு தொடர்பாக கட்சிகளின் கருத்துக்களை வழங்கக் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஜனவரி 31-ஆம் தேதி வரை அரசியல் கட்சிகளுக்கு அவகாசம் வழங்கிய நிலையில், அந்த கால அவகாசம் பிப்ரவரி 28ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.