Skip to main content

கலக்கல் கதகளி..! கல்லூரி மாணவிகளின் ஓணம் ஸ்பெஷல்..! (படங்கள்)

Published on 10/09/2019 | Edited on 10/09/2019

 

கேரளாவின் பாரம்பரிய திருவிழாவான ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. புராண கதையில் மகாபலி சக்கரவர்த்தியின் அகந்தையை அடக்கவேண்டும் என்பதற்காக திருமால் வாமன அவதாரமாக வந்து அவரிடம் மூன்றடி நிலத்தை தானமாக கேட்டார். அதற்கு மகாபலி ஒப்புக்கொண்டவுடன், திருமால் முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்து, மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து பாதாள உலகிற்கு தள்ளியதாக கூறப்படுகிறது. 
 

அவ்வாறு பாதாள உலகிற்கு செல்லும் முன்பு, ஆண்டுக்கு ஒருமுறை தன்னுடைய மக்களை காண வேண்டும் என்ற மகாபலி சக்கரவர்த்தியின் வேண்டுதலை திருமால் ஏற்றுகோண்டார். அதன்படி, மகாபலி சக்கரவர்த்தி மக்களை காணவரும் தினமே திருவோணத் திருநாளாக மலையாள மக்களால் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் சென்னை, வெப்பேரி பகுதியில் உள்ள ஜெயின் பெண்கள் கல்லூரியில் மாணவிகள் கேரளாவின் பாரம்பரிய உடையணிந்தும், கதகளி நடனம் ஆடியும் ஓணம் பண்டிகையை கொண்டாடினர். 

சார்ந்த செய்திகள்