Skip to main content

பட்டப் பகலில் மூதாட்டி கொலை; 2 பவுன் தங்க நகை பறிப்பு

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

old woman was incident in broad daylight near Kullanjavadi

 

குள்ளஞ்சாவடி அருகே பட்டப் பகலில் மூதாட்டியைக் கொலை செய்து 2 பவுன் தங்க நகை பறிப்பு குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

குள்ளஞ்சாவடி அருகே சம்மட்டிக்குப்பம் கிராமம் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம்(60). இவரது மனைவி ரங்கநாயகி(57), மகாலட்சுமி(55) ஆவார்கள். இவர்கள் விவசாய வேலை செய்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் வீட்டிலிருந்து ஆடுகளை மேய்ச்சலுக்காக பள்ளத்து ஏரி அருகில் உள்ள வயல் வெளிக்கு ஓட்டிச் சென்றுள்ளனர். 

 

இதனைத் தொடர்ந்து வயல் வெளிக்குச் சென்றவர்கள் அங்கு மகாலட்சுமி இறந்த நிலையில் கீழே கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து குள்ளஞ்சாவடி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த குள்ளஞ்சாவடி போலீசார் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு மூதாட்டியின் காது அறுந்த நிலையில் மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டு காதில் அணிந்திருந்த தோடு, தாலி செயின், கொலுசு உள்ளிட்டவை கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது. 

 

பின்னர் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கடலூரில் இருந்து கை ரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சோதனை செய்தனர். இது குறித்து ராமலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து நகைக்காக இந்த கொலை சம்பவம் நடந்ததா? வேறு ஏதேனும் காரணமா எனப் பல்வேறு கோணங்களில்  விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்