Published on 08/01/2019 | Edited on 08/01/2019
பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் ஆட்டோ ஓட்டுநர்கள். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்கியது.
பெட்ரோல், டீசல், கேஸ் வரி விதிப்பை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர வேண்டும். பெட்ரோல், டீசல், கேஸ் எரிப்பொருட்களின் விலையை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும். ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தினமும் வரியில்லாமல் மானியத்தில் 5 லிட்டர் பெட்ரோல், டீசல், கேஸ் ஆகியவகைளை வழங்க வேண்டும்.
சென்னை விமான நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட ஆட்டோவை அனுமதிக்க வேண்டும். ஆட்டோ உள்ளிட்ட சுய தொழில்களை அழிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் OLA, UBER-ஐ உடனடியாக தடைசெய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.