Skip to main content

ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகள்; உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற பெண்! 

Published on 17/05/2023 | Edited on 17/05/2023

 

Officials came to remove the encroachment!
மாதிரி படம்  

 

திருச்சி - திண்டுக்கல் சாலையில் நான்கு வழிச் சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருச்சி பிராட்டியூர் பகுதியில் மாநகராட்சி பள்ளி உள்ளது. இந்த பள்ளியைச் சுற்றி மாநகராட்சி இடத்தில் பொதுமக்கள் சிலர் ஆக்கிரமித்து வீடு கட்டியதாக புகார் எழுந்தது.

 

அந்தப் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி இருந்த பொதுமக்களுக்கு முறையாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கிடையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்கில் பட்டா உள்ள இடத்தை அளந்து விட்டுவிட்டு மீதி உள்ள இடத்தை மாநகராட்சி எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

அதனைத் தொடர்ந்து இன்று மாநகராட்சி சார்பில் அதிகாரிகள், ஊழியர்கள் உதவியுடன் பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

 

இந்த நிலையில் ஆக்கிரமிப்பு பணியில் ஊழியர்கள் ஈடுபட்டபோது, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர், எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அங்கிருந்த ஒரு பெண் வீடுகளை அகற்றக்கூடாது எனக் கூறி பெட்ரோலை உடம்பில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்பொழுது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.

 

 

சார்ந்த செய்திகள்