Published on 04/02/2020 | Edited on 04/02/2020
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட ஐந்து மாவட்டங்களுக்கு முதன்மை கல்வி அலுவலகம் ஏற்படுத்த தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது.

அதன்படி கள்ளக்குறிச்சி, தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டில் முதன்மை கல்வி அலுவலகம் அமைகிறது. மேலும் 5 முதன்மை கல்வி அலுவலர் உள்பட 92 புதிய பணியிடங்களையும் ஏற்படுத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை இயக்குனரின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே வரும் கல்வியாண்டு முதல் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலணிக்கு பதில் ஷு, ஷாக்ஸ் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ள்ளார்.