ஒடிசா ரயில் விபத்தில் தற்போதைய நிலவரப்படி 288 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மொத்தம் 800 பேர் இந்த ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்துள்ளதாகவும் சென்னையைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் இந்த ரயிலில் வந்ததாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில் 900க்கும் மேற்பட்டோர் இதுவரை காயம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே தமிழகத்திலிருந்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையிலான ஐஏஎஸ் அதிகாரி குழுவினர் ஒடிசா சென்றுள்ளனர். அதேபோல் அமைச்சர் உதயநிதியும் ஒடிசா சென்றுள்ளார். இந்த நிலையில் தமிழக தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரயில் விபத்து தொடர்பாக முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதில் தமிழக தலைமைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த ரயில் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த யாரும் அதிர்ஷ்டவசமாக காயமோ, உயிரிழப்போ ஏற்படாமல் தப்பித்துள்ள நிலையில் 230க்கும் மேற்பட்ட சென்னை பயணிகள் சிறப்பு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது.