Published on 18/06/2022 | Edited on 18/06/2022

அ.தி.மு.க.வில் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரனை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசினார்.
அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை விவகாரம் விவாதப் பொருளாகியிருக்கும் நிலையில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரனை சென்னை அசோக் நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (17/06/2022) இரவு சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற இச்சந்திப்பின் போது, கட்சியில் நிலவும் பிரச்சனைகள் குறித்து இருவரும் விவாதித்தாகக் கூறப்படுகிறது. கட்சி விவகாரங்களில் தங்களுக்கு ஆதரவு தர வேண்டுமென பண்ருட்டி ராமச்சந்திரனிடம் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.