Skip to main content

அரசு மருத்துவரை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஒட்டிய போஸ்டரை கிழித்த அரசு மருத்துவமனை ஊழியர்கள்

Published on 23/09/2017 | Edited on 23/09/2017
அரசு மருத்துவரை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஒட்டிய போஸ்டரை கிழித்த அரசு மருத்துவமனை ஊழியர்கள்



இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா அரசு மருத்துவமனைக்கு பல்வேறு கிராமங்களிலிருந்து நாள்தோறும் உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகள் வந்து செல்கின்றனர். பலநேரங்களில் மருத்துவமனையில் மருத்துவர்கள் இருப்பதில்லை இதை கண்டித்து நாம் தமிழர் கட்சி கீழக்கரை நகர் செயலாளர் பிரபாகரன் நகர் முழுவதும் அரசு மருத்துவமனை மருத்துவர் ஜவாஹிர் உசேனை கண்டித்து போஸ்டர் ஒட்டியுள்ளார்.

அரசு மருத்துவமனை சுற்றிலும் ஒட்டப்பட்டது. இதை பார்த்து கோபமடைந்த மருத்துவர் உடனடியாக மருத்துவமனை ஊழியர்களை அழைத்து மருத்துவமனை வெளிசுவர்களில் ஒட்டிய போஸ்டர்களை கிழித்துவிட உத்தரவிட்டார்.இதையடுத்து போஸ்டர் கிழித்து எரியப்பட்டது.

இதுபற்றி நாம் தமிழர் கட்சி நகர் செயலாளர் பிரபாகரன்,கீழக்கரை தாலுகா அரசு மருத்துவமனையை கண்டித்து நகர் முழுவதும் கண்டண போஸ்டர்கள் ஒட்டியிருந்தோம்.நாங்கள் எப்பொழுதும் பொதுமக்களுக்கு ஆதரவாகதான் போராட்டம் நடத்துகின்றோம், நாங்கள் ஒட்டிய போஸ்டரை அகற்றியதற்க்கு  கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம். விரைவில் அரசு மருத்துவமனை மருத்துவரை கண்டித்து போராட்டம் நடைபெறும் என்றார்.இதேபோல் கீழக்கரை பல்வேறு சமூகநல அமைப்புகள் அரசு மருத்துவருக்கு எதிராக கண்டணம் தெரிவித்து வருகின்றனர்.

- பாலாஜி

சார்ந்த செய்திகள்