தமிழகத்தில் லுலு நிறுவனம் ஒரு செங்கல்லைக் கூட வைக்க முடியாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
அண்மையில் துபாய் சென்றிருந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் லுலு குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநருடன் சந்திப்பு மேற்கொண்டிருந்தார். இந்த சந்திப்பின்போது, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் லுலு நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. லுலு நிறுவனம், 3,500 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு என்ற வகையில், 3 திட்டங்களை மேற்கொள்ள உள்ளது. அதில், 2,500 கோடி ரூபாய் முதலீடுகளில் 2 வணிக வளாகங்கள் மற்றும் 1,000 கோடி ரூபாய் முதலீடுகளில் ஒரு ஏற்றுமதி சார்ந்த உணவு பதப்படுத்தும் திட்டத்தைக் கொண்டுவர லுலு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் லுலு நிறுவனம் ஒரு செங்கல்லை கூட வைக்கமுடியாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். 'சாலையோர வியாபாரிகள் மற்றும் சிறுசிறு வியாபாரிகளை பாதிக்கும் லுலு நிறுவனத்தைத் தமிழகத்தில் அனுமதிக்க முடியாது' எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.