தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ''ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை கடுமையாக உயர்த்தி உள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை குறைப்பது தற்போது சாத்தியமில்லை. தமிழ்நாடு அரசின் நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிடுவோம். சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். மாநிலங்களுக்கு வேண்டிய வழங்கவேண்டிய வரித் தொகையை ஒன்றிய அரசு தர மறுக்கிறது. பெட்ரோல் மீது 10 ரூபாயாக இருந்த வரியை ஒன்றிய அரசு 32 ரூபாய் 90 காசாக உயர்த்தியுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல் மீதான வரியை ஒன்றிய அரசு உயர்த்துகிறது. இப்பொழுது பெட்ரோல் பொருட்கள் மீதான வரியை குறைத்தால் அது மத்திய அரசுக்கு சாதகமாகிவிடும். பெட்ரோல் மீதான 32 ரூபாய் 90 பைசா வரியில் 31 ரூபாய் 50 பைசாவை ஒன்றிய அரசு எடுத்துக்கொள்கிறது.