Skip to main content

தொடங்கியது வடகிழக்கு பருவமழை - வானிலை ஆய்வு மைய இயக்குநர் பேட்டி 

Published on 29/10/2022 | Edited on 29/10/2022

 

Northeast Monsoon has started

 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.

 

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''ஈரப் பதத்துடன் கூடிய கிழக்கு திசைக் காற்று வங்கக் கடல் மற்றும் தென்னிந்தியப் பகுதிகளில் நிலவி வரும் சூழ்நிலையில், வடகிழக்கு பருவமழை தமிழகத்தின் கடலோரப் பகுதிகள் புதுவை, காரைக்கால் மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளில் இன்று முதல் துவங்கி உள்ளது.

 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூரில் 8 சென்டி மீட்டர் மழையும், புதுச்சேரியில் ஏழு சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. தற்பொழுது தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கையை ஒட்டியுள்ள பகுதியில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அடுத்து வரும் ஐந்து தினங்களை பொறுத்தவரையில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழையைப் பொறுத்தவரை அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு தெற்கு தமிழகம், அதனை ஒட்டிய கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட வட தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்து இரண்டு நாட்களுக்கு மீனவர்களுக்கான சிறப்பு எச்சரிக்கைகள் எதுவும் இல்லை'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்