குழந்தைகள் ஆபாச படம் பதிவேற்றம் செய்வது அதை மற்றவர்களுக்கு பகிர்வது ஆகிய செயல்களில் ஈடுபடுவோரை தமிழக காவல்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 12ஆம் தேதி திருச்சி பாலக்கரை சார்ந்த ஏசி மெக்கானிக் கிறிஸ்டோபர் அல்போன்ஸ் என்பவரை தமிழ்நாட்டில் முதல் முறையாக கைது செய்து குண்டர் சட்டத்தில் தற்போது திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் .
இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த வாலிபர் நியாஸ் அலி என்பவர் கரூர் கோவை ரோட்டில் வையாபுரி நகரின் உள்ள சலூன் கடையில் வேலை செய்து வந்தார்.
இவர் குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து மற்றவர்களுடன் பகிர்ந்து வருவதாக சென்னையில் உள்ள குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு தேசிய மையத்திற்கு தகவல் கிடைத்தது. இதை கண்காணித்து உறுதி செய்த சென்னை அதிகாரிகள் கருவி பாண்டியராஜனுக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் அந்த செல் கடைக்குச் சென்று நியாஸ் அலியின் செல்போனை வாங்கி ஆய்வு செய்து கடந்த ஆண்டு மே மாதம் ஐந்தாம் தேதி முதல் ஜனவரி 30-ஆம் தேதி வரை குழந்தைகள் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்வதும் அதை மற்றவர்களுக்கு பகிர்வதை உறுதி செய்தனர்.
இதனையடுத்து கரூர் நகர காவல் உதவி ஆய்வாளர் கார்த்திக் ஆன்லைனில் ஆபாச படங்கள் வெளியிடுவது தொடர்பான தகவல் தொடர்பு குற்றப்பிரிவு 67 67 பி 67 பி(பி) மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சட்டமான போக்சோ சட்டப் பிரிவின்படி 13 14 (1)15 ஆகிய மூன்று பிரிவின்கீழ் வழக்குபதிவு செய்து நியாஸ் அலியை கைது செய்து டவுன் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்து பின்பு கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.