Published on 19/12/2024 | Edited on 19/12/2024
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பெரியபேட்டை பகுதியில் வட மாநில கொள்ளையர்கள் இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் வந்துள்ளனர். அங்கு ஒரு வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவில் இருந்து பேட்டரிகளை கழட்ட முயன்றுள்ளனர். அதைப் பார்த்த பொதுமக்கள் கத்தி கூச்சலிட்டுள்ளனர். அந்த 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிய போது அதில் ஒருவர் மட்டும் பொதுமக்களிடம் சிக்கியுள்ளார்.
பிடிபட்ட அந்த வடமாநில இளைஞரை கை, கால்களை கட்டி தர்ம அடி கொடுத்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகர காவல் துறையினர் அந்த வடமாநில இளைஞரை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.