தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை காரணமாக ஜூன் 14ஆம் தேதிவரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது. ஊரடங்கைத் தளர்த்துவது அல்லது கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து இன்று (10.06.2021) மீண்டும் தமிழ்நாடு முதல்வர் சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ''கரோனா பணியிலிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு ஒருநாள் உணவு செலவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மருத்துவர், செவிலியருக்கு ஒருநாள் உணவு செலவாக அதிகபட்சம் 450 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கரோனா தொடர்ந்து குறைந்துவருகிறது. தமிழ்நாட்டில் 36 மாவட்டங்களில் கரோனா தடுப்பூசிகள் கையிருப்பு இல்லை. சென்னையில் 1,060 தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளன'' என்றார்.