வேலூர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் ஒருவருக்கு, 30 வயதில் மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவரது மனைவி வேலைக்கு செல்லவில்லை. வீட்டில் குழந்தைகளை பார்த்துக்கொண்டு இருந்துள்ளார். வீட்டில் இருந்த மனைவிக்கு ஆண்ட்ராய்டு செல்போன் வாங்கிக்கொடுத்துள்ளார்.
செல்போனில் மூழ்கிய அந்த பெண், டிக்டாக் செயலி பற்றி அறிந்துள்ளார். அதனை கற்றுக்கொண்ட அவர், அந்த செயலியில் பாடல், நடனம், வசனம் உள்ளிட்டவற்றை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
இவரது பதிவுகளை வேலூரில் தங்கி பணிபுரியும் வெளியூர் நபர் ஒருவர் பார்த்துள்ளார். தொடர்ந்து பார்த்த அவர் அதனை லைக் பண்ணியுள்ளார். பின்னர் கமெண்ட் கொடுத்து பின் தொடர்ந்துள்ளார். தொடர்ந்து இதேபோல் கமெண்ட் கொடுத்து பழகிய இவர்கள், ஒருவருக்கு ஒருவர் செல்போன் எண்ணை கொடுத்து பேசி பழகியுள்ளனர். பின்னர் நேரில் சந்தித்து பேசி பழகியுள்ளனர். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
டிக்டாக் மற்றும் அந்த வாலிபருடன் பழகியதால் வீட்டில் கணவன், குழந்தைகளை கவனிக்காமல் இருந்தள்ளார். மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவர், ஒரு நாள் செல்போனை எடுத்து பார்த்துள்ளார். அதில் தனது மனைவி டிக்டாக்கில் இருப்பதும், ஒரு வாலிபருடன் அடிக்கடி பேசியிருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து நமக்கு குழந்தைகள் உள்ளனர். குடும்பத்தை ஒழுங்காக பார்த்துக்கொள், இந்த விசயம் நமது பெற்றோருக்கு தெரிந்தால் அசிங்கம் என அறிவுரை கூறியுள்ளார்.
இருப்பினும் அந்த பெண் அதை கேட்கவில்லை என்பதால், வேலூர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரை பெற்ற போலீசார், அந்த பெண்ணிடம் பழகிய வாலிபரை அழைத்து அறிவுரை கூறியுள்ளனர். அப்பவும் கேட்கவில்லை என்பதால் அந்த வாலிபர் வேலை செய்யும் நிறுவனத்தில் அந்த வாலிபர் பற்றி போலீசார் சொல்லியுள்ளனர். இதையடுத்து அந்த வாலிபரை அந்த நிறுவனம் வேலையைவிட்டு அனுப்பிவிட்டது. பின்னர் போலீசார் அந்த வாலிபரை அழைத்து அறிவுரை கூறி அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து அந்த பெண்ணுக்கும் போலீசார் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்துள்ளனர்.
இருப்பினும் அந்த பெண்ணின் கணவர், மனைவி மீது தனக்கு நம்பிக்கை இல்லை. எவ்வளவு அறிவுரை கூறினாலும் அவள் கேட்பது போல் தெரியவில்லை. அதனால் அவளை விவாகரத்து செய்யும் முடிவு எடுத்திருப்பதாக கூறியுள்ளார். செல்போன் பயன்படுத்துவதை தவிர்த்து குழந்தைகளை பற்றி நினைக்குமாறு உங்கள் மனைவிக்கு அறிவுரை கூறியுள்ளோம். நம்பிக்கையுடன் வாழ்க்கையை தொடங்குங்கள் என்று அவருக்கும் அட்வைஸ் செய்து அனுப்பியுள்ளனர் போலீசார்.