Published on 29/04/2020 | Edited on 29/04/2020
கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. அதேபோல் தமிழகத்திலும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் இன்றுவரை சென்னையில் முழு ஊரடங்கு உத்தரவு பின்பற்றப்பட்டது. இந்நிலையில் நாளை பொதுமக்கள் அத்தியாவசிய பொருள்களை வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் சில அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார்.
அதன்படி, தங்கள் பகுதியில் உள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொதுமக்கள் பொருட்களை வாங்கலாம். பொருட்களை வாங்க வருவோர் முக கவசம், தனிமனித இடைவெளியை அவசியம் கடைபிடிக்க வேண்டும். கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி வாங்க பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது. இருசக்கர வாகனங்கள், காரில் சென்று பொருட்களை வாங்க வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.