சென்னையில் நடந்த சினிமா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய சினிமா தயாரிப்பாளர் மற்றும் நடிகர் R.K.சுரேஷ், "ரிவியூ பண்றவங்கள சொல்றேன்; குண்டக்க, மண்டக்கலாம் ரிவியூ பண்ணாதீங்க. சினிமாவிலேயே வாழ்ந்துட்டு, சினிமாலேயே எதுக்கு சொல்றீங்க. அஜித் சார பத்திப் பேசுறதற்கு யாருக்குமே அருகத்தைக் கிடையாது. சினிமாவையே நம்பியிருக்கிற உங்களுக்கு அருகதைக் கிடையாது. நீங்க என்ன என் படத்தை வைச்சி கலாச்சாய்ச்சாலும் பரவாயில்ல; கிழிச்சாலும் பரவாயில்ல. எனக்கு அவசியமே கிடையாது.
சினிமாவ சினிமாக்காரனே கொல்லாதீங்க. எவ்ளோ பேர் அழகா ரிவியூ பண்றாங்க. ஒரு மனுஷனோட உடம்ப பத்தியோ, கலர பத்தியோ சொல்றதுக்கு எவனுக்குமே துப்பு கிடையாது; நீ யாரா வேணாலும் இருந்துக்கோ, என்ன வேணாலும் என்னை கிழிச்சிக்கோ. நான் ஒரு படம் எடுத்திருக்கேன் விசித்திரன், அதைப் பாத்துட்டு என்னை கிழி. சரி இல்லன்னா நான் சினிமா விட்டே போயிடுறேன்யா.
விசித்திரனு படத்துக்காக 30 கிலோ எடை போட்ருக்கேன், திரும்ப குறைச்சிருக்கேன். ஆறு மாசம் உழைப்பு, பச்ச தண்ணீ இல்லாம 30 நாள் இருந்திருக்கேன். சினிமாவோட வலி தெரியும். எனக்கு மக்கள் இருக்காங்க. மக்கள் சப்போர்ட் இருக்கு. நான் உண்மையை பேசறேன். என்னை கைத் தூக்கறத்துக்கு என் கடவுள் இருக்கான்; பெத்த அப்பா இருக்கான்; மக்கள் இருக்காங்க.
நான் சினிமாக்காக தான் இருக்கேன். ரிவியூ பண்ணுங்க; நல்லா பண்ணுங்க. தப்பா இருந்தா தப்புன்னு சொல்லுங்க. அவன் 180 கோடி போட்டு படம் எடுத்து வச்சிருக்கான், அசால்ட்டா சொல்லிட்டு போறது, அது சரியில்ல; இது சரியில்லன்னு.
தர்மதுரை படம் எடுத்த, அந்த நேரத்துல ஒரு படம் ஃபெயிலியர் ஆகுது. இந்த படத்த வாங்க வந்தவங்க, நான் தயாராரிச்சதுல 25%க்கு கேக்குறான். ஆனால், அதே படம் தான் 30 கோடி வரை வியாபாரம் பண்ணுச்சு. மக்கள் கையில மட்டும்தாங்க எல்லாம் இருக்கு" என்றார்.
வலிமை உள்ளிட்ட பல படங்களுக்கான ப்ளூ சட்டை மாறனின் சினிமா ரிவியூகளுக்கு எதிராக திரையுலகினர் பலரும் குரல் கொடுத்து வரும் நிலையில், சினிமா தயாரிப்பாளர் R.K.சுரேஷ் காட்டாமாகவும், மறைமுகமாகவும் இதனை பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.