Skip to main content

நீலகிரி மாவட்ட அரசு கேபிள் டிவியில் புதிய சர்ச்சை - சென்னையை சேர்ந்த ஆளுங்கட்சி பிரமுகரால் கிராமத்தின் அமைதிக்கு பங்கம்

Published on 24/09/2018 | Edited on 24/09/2018

 

 

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் சுமார் 30 லட்சம் டிஜிட்டல் பாக்ஸ்கள் தமிழகம் முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அரசு கேபிள் டிவியை முடக்கவேண்டும் என்ற நோக்கத்தில் தனியார் நிறுவனங்கள் அரசு கேபிள் டிவியில் முக்கிய பொருப்பில் உள்ளவர்களை தங்கள் வசத்தில் வைத்து மிக சொற்ப அளவிலான செட்டாப் பாக்ஸ்களை பெயரளவில் விநியோகித்துவந்தனர். இதில் மாவட்டத்திலுள்ள கூடலூர் , பந்தலூர் தாலூக்காவிற்கு அரசு கேபிள் டிவி அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் எந்த விதமான உதவியும் இல்லாத நிலையிலும் அங்கிருக்கும் டிஸ்டிரிபியூட்டர் மூலம் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் எஞ்சியுள்ள நான்கு தாலூக்காக்களுக்கு சுமார் 10 பேர் உதகை அலுவலகத்தில் பணிபுரிந்தும் இதுவரை சுமார் 13000 செட்டாப்பாக்ஸ்கள் மற்றுமே வழங்கப்பட்டுள்ளது இதற்கு சான்றாக அமைகிறது. 

குறிப்பாக கடந்த 6 மாதத்தில்  சுமார் 70 ஆயிரத்திற்கும் மேல் செட்டாப் பாக்ஸ்களை நிறுவ உடந்தையாக இருந்த அரசு கேபிள் டிவியில் பணிபுரிபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையும் வலுபெற்றிருந்தது.

  இதுகுறித்து சென்னையிலுள்ள அரசு கேபிள் டிவி தலைமையகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு புகார்கள் அனைத்து தரப்பினரிடமிருந்தும் சென்றுவந்த நிலையில் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து ஊழலை வேருடன் பிடுங்கி எரியாமலும், அவர்கள் மீது விசாரணை கமிஷன் ஏதும் அமைக்கப்படாமலும் வெறுமனே வேறு பணிக்கு மாற்றலாகி இருப்பதும், அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் இருந்து பல்வேறு ஊழல்களுக்கு காரணமாக கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இருந்துவருபவர் மீது நேர்மையாக பணியாற்றிய பல அதிகாரிகள் ஆதாரத்துடன் குற்றச்சாட்டுகளை சுமத்தியும் அவர்மீது மாவட்ட நிர்வாகமோ, கேபிள் டிவி நிறுவனமோ நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்துவருவதே மேன்மேலும் குற்றச்செயல்கள் நடைபெறுவதற்கு காரணமாக உள்ளதென சமூக ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.


 

tac

 

 இதனிடையேஅரசு கேபிள் டிவியில் ஊழல் செய்து வரும் ஒருவர் தற்போது சென்னையை சேர்ந்த ஆளங்கட்சி பிரமுகருக்கு மட்டும் சிக்னல் வழங்கி நீலகிரி மாவட்டத்திலுள்ள கிராமங்கள் தோரும் அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் வழங்க முயற்சி செய்துவருவது கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தையையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக அரசு கேபிள் டிவி சிக்னல் வழங்கவேண்டும் என்ற கோரி்க்கை வைத்திருந்த கேபிள் டிவி ஆப்பரேட்டர்களை அரசிற்கு எதிரிகளாக சித்தரித்து நாடகமாடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

 

அரசு கேபிள் டிவி சிக்னல் வழங்கினால் எடுக்க தயாராக உள்ள ஆப்பரேட்டர்களுக்கு தேவையில்லாமல் மிரட்டல் விடுவதோடு கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தொழில் செய்துவரும் அவர்களது வாழ்வாதாரத்தை அழிக்க முயற்சி செய்யும் இவர்கள் மீது தமிழக அரசின் இரும்புகரம் பாயாவிட்டால் நீலகிரி மாவட்டத்தில் கிராமங்கள் தோரும் பெரும் கொந்தளிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும், தமிழக அளவிலான கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் இணைந்து போராட்டங்கள் நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது. ஆகவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு நீலகிரி மாவட்டத்தின் அமைதியை நிலைநாட்டும் வகையில் அரசு கேபிள் டிவி எடுக்க விரும்பும் ஆப்பரேட்டர்கள் உள்ள இடத்தில் புதிதாக யாரையும் நியமனம் செய்யவேண்டாம் எனவும், அரசின் சிக்னல் பெற தயாராக இல்லாத இடங்களில் வேண்டுமானால் பிற ஆப்பரேட்டர்கள் முலம் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளலாம் எனவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தாய் முதுகில் ஜாலி ரைடு போன குட்டி கரடிகள்! வைரல் வீடியோ! 

Published on 13/06/2022 | Edited on 13/06/2022

 

நீலகிரி மாவட்டம், ஊட்டி நகரை சுற்றி தொட்டபெட்டா, கேர்ன்ஹில் உள்ளிட்ட வனப்பகுதிகளில் காட்டெருமை, கடமான், சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு ஒரு கரடி, வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊட்டி நகரின் மையப்பகுதியான மார்க்கெட் அருகே உள்ள புது அக்ரஹாரம் தெருவில் புகுந்து நடமாடியது. வீடுகள் முன்பு நள்ளிரவில் கரடி உலா வந்தது. இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.விகளில் பதிவாகியிருந்தது. 


தற்போது அதேபோல், நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பகுதியில் அமைந்துள்ள கேத்தரின் நீர்வீழ்ச்சி செல்லும் சாலையில் ஒரு தாய் கரடி, தன் முதுகில் இரண்டு குட்டிகளை சுமந்து எதிர்ப்புறம் உள்ள தேயிலைத் தோட்டத்திற்கு சென்றுள்ளது. அதனை அவ்வழியே சென்ற பயணித்த பயணி ஒருவர் வீடியோ பதிவு செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. 

 

 

Next Story

ஆடையின்றி அடுத்தவர் வீட்டிற்குள் நுழைந்த அதிமுக முன்னாள் எம்.பி.! 

Published on 09/11/2021 | Edited on 09/11/2021

 

AIADMK ex-MP Gopalakrishnan enters house next without clothes

 

அதிமுக முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன், தீபாவளி அன்று ஆடையின்றி ஒருவர் வீட்டினுள் சென்ற விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

கடந்த அதிமுக ஆட்சியில் நீலகிரி தொகுதி மக்களவை எம்.பி.யாக இருந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் நகராட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் தீபாவளி பண்டிகை அன்று மதுபோதையில், முத்தாலம்மன் பேட்டை பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டிற்குள் ஆடைகள் இன்றி வெற்றுடம்புடன் நுழைந்துள்ளார்.

 

அவர் அப்படி நுழைந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவ்வீட்டார், செய்வதறியாது தாக்கியுள்ளனர். அதேசமயம் அவர், ஆடையின்றி வீட்டிற்குள் இருந்ததை வீடியோ காட்சியாக படம் பிடித்துள்ளனர். அதன்பிறகு அவரை வெளியேற்றிவிட்டு, குன்னூர் நகர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். 

 

இதையடுத்து, அதிமுக முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன், தான் தாக்கப்பட்டதாகக் கூறி கடந்த 5ஆம் தேதி குன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதியாகியுள்ளார். 

 

இதுகுறித்து இருவரிடமும் விசாரணை நடத்திய காவல்துறையினர், வீட்டிற்குள் குடிபோதையில் தகாத வார்த்தை பேசிய முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன் மீதும், அவர் மீது தாக்குதல் நடத்திய வீட்டின் உரிமையாளர் கோபி மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதிமுக முன்னாள் எம்.பி. மது போதையில் அடுத்தவரின் வீட்டிற்குள் ஆடையின்றி நுழைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.