Skip to main content

தமிழகத்தில் அமலுக்கு வந்த இரவு நேர ஊரடங்கு!! (படங்கள்)

Published on 07/01/2022 | Edited on 07/01/2022

 

 

தமிழகத்தில் உருமாறிய ஒமிக்ரான் வகை கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒமிக்ரான் பாதிப்பை  கட்டுப்படுத்த அந்ததந்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஏற்கனவே டெல்லி, உத்திரபிரதேசம் உள்ளிட மாநிலங்களில் நோய் பரவலை கருத்தில் கொண்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அமலில் உள்ளது.

 

இதனிடையே தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி சென்னையில் நேற்று இரவு 10 மணி முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மாநகர் முழுவதும் 10,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.

 

அதே போல் சென்னையில் 499 இடங்களில் தடுப்புகள் அமைத்து தேவையின்றி வெளியில் வருபவர்கள் கண்காணிக்கப்படுவார்கள் என்றும், அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த வகையில் சென்னை அண்ணா நினைவு வளைவு, ராஜீவ் காந்தி சாலை, அடையார் பாலம் சாலை மற்றும் காமராஜர் சாலை உள்ளிட்ட இடங்களில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

 


 

சார்ந்த செய்திகள்