கட்சியை வழிநடத்தக் கூடிய தலைமையாக
தினகரன் விளங்குவார்: விஜயதாரணி
தினகரன் விளங்குவார்: விஜயதாரணி
காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ விஜயதாரணி இன்று காலை அதிமுக அம்மா அணியின் துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை அடையாரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.
இந்த சந்திப்பிற்கு பின் விஜயதாரணி செய்தியாளர்களிடம் கூறியதாவது,
டிடிவி தினகரன் மாமியார் சந்தான லட்சுமி அம்மாளின் மறைவிற்கு துக்கம் விசாரிக்க வந்தேன். அரசியல் ரீதியான சந்திப்பு எதுவும் இல்லை. புதிதாக யாராவது அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் அதே போல தினகரனையும் வரவேற்கிறோம்.
கட்சியை வழிநடத்தக் கூடிய தலைமையாக தினகரன் விளங்குவார். இதனால் தினகரனை முதல்வர் பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஆதரிக்க வேண்டும். தமிழக ஆளும் கட்சியின் சுதந்திரத்தை பா.ஜ.க. பறித்துள்ளது. பா.ஜ.க.வின் செயலை கண்டிக்காமல் விட்டால் அதிமுக நிலைக்காது.
திராவிட கட்சிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியை அழித்து பாஜக தமிழகத்தில் காலுன்ற நினைப்பது ஒருபோதும் நடக்காது. நாடுமுழுவதும் பாஜகவிற்கு எதிராக பேசுபவர்கள் மீது வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது. இதே நெருக்கடி நிலை தொடர்ந்தால் பாஜகவின் நிழலை கூட மக்கள் ஏற்க மாட்டர்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
படங்கள்: அசோக்குமார்