தினகரன் அணியின் கபடநாடகம் எடுபடாது: மதுசூதனன் பேட்டி
ஜெ. மரணம் தொடர்பாக விசாரணை நடத்த தினகரன் அணி கோரிக்கையின் அடிப்படையிலே தொடங்கப்பட்டது. இன்னும் ஜெ.வின் மரணம் தொடர்பான முக்கிய ஆவணங்களை விரைவில் வெளியிடுவோம். ஓபிஎஸ்குகு தர்மயுத்தம் பற்றி பேசவே அருகதை இல்லை என்று தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்கத்தமிழ்ச்செல்வன் கூறியிருப்பது குறித்து ஓ.பி.எஸ். அணியின் மூத்த தலைவர் மதுசூதனனிடம் கேட்டோம்.
அதற்கு பதில் அளித்த அவர், தங்கதமிழ் செல்வனுக்கு என்ன அருகதை இருக்கிறது. தினகரனை அம்மா கட்சியை விட்டு நீக்கிய பிறகு எப்போது இணைந்தார் என்று கூறுவாரா. முதலில் அவர் கட்சி உறுப்பினரா என்று கேள்வி எழுப்பினார். முன்னாள் முதல்வர் அம்மா அவர்களின் மரணத்தில் மர்மம் இருப்பது என்றுதான் நாங்கள்தான் கூறி வருகிறோம். தற்போது தன்னுடைய அரசியல் ஆதாயத்தை தேட இந்த முடிவை இவர் எடுத்துள்ளளார். அப்படி ஜெ.வின் மரணம் தொடர்பாக முக்கிய ஆவணம் விரைவில் வெளியிடுவோம் என்றால் இதில் அவர்களுக்கும் பங்கு உண்டு என்றுதானே அர்த்தம். இப்படி இவர்கள் கபடநாடகம் ஆடுவது எடுபடாது. அவர்கள் நினைப்பது நடக்காது. இன்று மாலை 5 மணிக்கு ஓ.பி.எஸ். தலைமையில் ஆலோசனை நடக்க உள்ளது. ஆலோசனைக்குப் பிறகு எங்கள் நிலைப்பாடு தெரிய வரும் என்றார்.
-அருண்பாண்டியன்