மீண்டும் ஹோட்டலிலிருந்து ரிசார்ட்டுக்கு மாறும்
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள்!
கடந்த 22-ஆம் தேதி புதுச்சேரிக்கு வந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சின்ன வீராம்பட்டினத்திலுள்ள வின்ட் ஃப்ளவர் ரிசார்ட்டில் 3 நாட்கள் தங்கினர். வெள்ளி, சனி, ஞாயிறு வார இறுதி நாட்களில் ரிசார்ட்டிற்கு முன்பதிவு செய்தவர்கள் வந்ததால் எம்.எல்.ஏக்கள் புதுச்சேரி முதலியார்பேட்டை தொகுதியிலுள்ள "தி சன்வே மேனார்" ஹோட்டலுக்கு வந்து . தங்கினர். இங்கு 10 அறைகளில் 20 எம்.எல்.ஏக்களும் தங்கியிருந்தனர்.
இந்நிலையில் விடுமுறை தினம் முடிவதால் இன்று மாலை மீண்டும் சின்னவீராம்பட்டினம் "விண்ட்பிளவர்" சொகுசு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 20 பேரும் விடுதிக்கு செல்கின்றனர். எம்எல்ஏக்களுக்கு இந்த முறை இந்த விடுதியில் 20 சொகுசு அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
- சுந்தரபாண்டியன்