காதல் திருமணம் நடந்து முடிந்த 20 நாளில் புதுப்பெண் மாப்பிள்ளை வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் ஹைதராபாத்தில் ஒரு பிரபல தனியார் சாப்ட்வேர் கம்பெனியில் சாப்ட்வேர் என்ஜினீயராக பூர்ணிமா வேலை பார்த்து வருகின்றார். வேலைக்கு செல்லும் போது அதே பகுதியில் இருக்கும் கார்த்திக் என்ற வாலிபருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அதன் பின்பு இவர்களுடைய நட்பு காதலாக மாறியுள்ளது. இதனால் பூர்ணிமாவும், கார்த்திக்கும் கடந்த சில மாதங்களாகவே காதலித்து வந்துள்ளனர். இவர்களுடைய காதல் இரண்டு வீட்டிற்கும் நாளடைவில் தெரிய வந்துள்ளது. பூர்ணிமாவின் பெற்றோர்கள் அவருடைய காதலுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். கார்த்திக் வீட்டில் காதலுக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளனர்.

இதனை தொடர்ந்து, பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி பூர்ணிமா காதலன் கார்த்திக்கை கடந்த 20 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு இருக்கின்றார். பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டதால், இவர்கள் திருமணத்தில் பூர்ணிமாவின் பெற்றோர், உறவினர்கள் என யாரும் கலந்துகொள்ளவில்லை. திருமணத்தில் கார்த்திக்கின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டு வந்துள்ளனர். திருமணம் முடிந்தும் பெற்றோர் தன்னை ஒதுக்கிவிட்டனர் என நினைத்து மன வருத்தத்தில் பூர்ணிமா இருந்ததாக கூறுகின்றனர்.
இந்தநிலையில் நேற்று கடந்த செவ்வாய்க்கிழமை பூர்ணிமா கார்த்திக்கின் வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக கூறுகின்றனர். பூர்ணிமா தற்கொலை செய்துகொண்டதை அவரின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த பூர்ணிமாவின் பெற்றோர், கார்த்திக் மற்றும் அவருடைய பெற்றோர் தங்கள் மகளை கொலை செய்து விட்டதாக காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து இருக்கின்றனர். காதல் திருமணம் முடிந்த 20 நாளில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பூர்ணிமா தற்கொலை செய்துகொண்டாரா? அப்படி தற்கொலை செய்து இருந்தால் தற்கொலைக்கான காரணம் என்ன? அல்லது அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.