திருவெண்ணெய்நல்லூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் ரூ.3 கோடியே 75 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் கட்டிடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் சி.விசண்முகம், இரா.குமரகுரு எம்.எல்.ஏ ஆகியோர் பங்கேற்று பூமி பூஜை செய்து கட்டிடம் கட்டும் பணியினை தொடங்கி வைத்தனர்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் பகுதி மக்களின் வெகு நாள் கோரிக்கையான அரசூர், திருவெண்ணெய் நல்லூர், சித்தலிங்கமடம் ஆகிய குறுவட்டங்களை ஒன்றாக இணைத்து திருவெண்ணெய்நல்லூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 12.11.2019ஆம் தேதி அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, 11.12.2020 அன்று திருவெண்ணெய்நல்லூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் கட்டிடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன். திருவெண்ணய்நல்லூர் வடக்குப்பகுதி அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் இரா.ஏகாம்பரம், திருவெண்ணொய்நல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் காண்டீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருவெண்ணைநல்லூர் தெற்குப்பகுதி அ.தி.மு.க. ஒன்றிய கழக செயலாளர் ராமலிங்கம் வரவேற்றார். விழாவில் கலந்துகொண்டு பூமி பூஜை செய்து, கட்டிட பணியை தொடங்கி வைத்தார் சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம்.
திருவெண்ணெய்நல்லூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலக கட்டிடம் ரூ.3 கோடியே 75 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் மூன்று மாடி அடுக்கு கட்டிடமாக 4 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட இருக்கிறது.