சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராமை இந்திய குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதலாக ஐந்து பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. விக்டோரியா கவுரி, பாலாஜி, ராமகிருஷ்ணன், கலைமதி, திலகவதி ஆகிய ஐந்து பேரை கொலிஜியம் கொடுத்த பரிந்துரையை ஏற்று நிரந்தர நீதிபதிகளாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நியமித்து உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தற்போது புதிய தலைமை நீதிபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருக்கும் ஆர்.மகாதேவன் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட நிலையில் மும்பை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியாக இருந்த கல்பாத்தி ராஜேந்திரன் ஸ்ரீராமை சென்னை நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நியமித்துள்ளார். கே.ஆர்ஸ்ரீராமிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி விரைவில் பதவிப்பிரமாணம் செய்து வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.