Skip to main content

நெடுவாசல்: தீ பற்றி எரிந்த ஒ.என்.ஜி.சி எண்ணெய் கிடங்கு மூடல்!

Published on 15/09/2017 | Edited on 15/09/2017
நெடுவாசல்: தீ பற்றி எரிந்த ஒ.என்.ஜி.சி
எண்ணெய் கிடங்கு மூடல்!



புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் அருகில் உள்ள நல்லாண்டார்கொல்லையில் ஒ.என்.ஜி.சி நிறுவனத்தால் அமைக்கப்பட்ட எண்ணெய் கழிவு தொட்டியில் நேற்று ஏற்பட்ட திடீர் தீயால் கரும் புகை கிராமத்தையே மூழ்கடித்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களின் போராட்டத்திற்கு பிறகு அந்த தொட்டி மூடப்படும் என்று உறுதியளித்த அதிகாரிகள் இன்று காலை வந்தனர்.

தீ பற்றிய சம்பவம் அறிந்து தி.மு.க எம்.எல்.ஏக்கள் திருமயம் ரகுபதி, புதுக்கோட்டை பெரியண்ணன் அரசு, ஆலங்குடி மெய்யநாதன் ஆகியோர் வந்து ஆபத்தான தொட்டியை மூட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து தீ பற்றி எரிந்த கழிவு எண்ணெய் தொட்டி மட்டும் மூடும் பணி தொடங்கிய போது அருகில் உள்ள தொட்டியையும் மூட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை எற்கப்படவில்லை. இதனால் மக்கள் மீண்டும் போராட்டம் நடத்தப்படலாம் என்றனர்.

- இரா.பகத்சிங்

சார்ந்த செய்திகள்