பிரதமர் நரேந்தர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசிய புகாரின் பேரில் நெல்லை கண்ணனை பெரம்பலூரில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர்.
நெல்லை கண்ணன் கைதுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கண்டங்களை தெரிவித்து வருகின்றன. அதன் தொடர்ச்சியாக தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ் அழகிரி கணடனம் தெரிவித்துள்ளார். அதில் மோடி, அமித்ஷாவுக்கு எதிராகப் பேசினால் உடனடியாக கைது செய்கிறீர்கள். ராஜிவ்காந்தியைப் பற்றி சர்ச்சையாகப் பேசிய சீமானை ஏன் கைது செய்யவில்லை? நெல்லை கண்ணனுக்கு ஒரு நீதி? சீமானுக்கு ஒரு நீதியா? என கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேபோல் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நெல்லை கண்ணன் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் நெல்லை கண்ணன் கைது தமிழுக்கும், தமிழர்க்கும் நேர்ந்த பெருத்த அவமானம். மேடை பேச்சுகளுக்கு கைது என்றால் பாஜகவின் எந்தத் தலைவரும் வெளியில் இருக்க தகுதியற்றவர்கள்.
எஸ்.டி.பி.ஐ கட்சி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், பாஜக அரசு குறித்த நெல்லை கண்ணனின் உரையில் எள்ளளவும் உள்நோக்கம் என்பது கிடையாது. நெல்லை கண்ணனுக்கு போதுமான மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் எஸ்.டி.பி.ஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.