கடத்தல் சரக்குகள் பல்வேறு வழிகளில் குருவிகளின் மூலமாக சென்றடைபவர்களைச் சென்றடைந்து விடும். தற்போது நடந்த கடத்தல் முறை புருவங்களை உயர வைக்கிறது . மாட்டு சந்தைகளில் தரமான மாடுகள், பால் தரும் பசுக்களை விற்கக் கூடாது, கேரளாவிற்கும் கடத்தக் கூடாது என்ற அரசின் உத்தரவிருக்கிறது.
நெல்லை மாவட்டத்தின் கடையம் நகரம் மாட்டுச் சந்தை பிரலபமானது. வார திங்கள் கிழமையின் பரபரப்பாகப் செயல்படும். நேற்று சந்தை என்பதால் வியாபாரம் சூடு பிடித்த நிலையில் விதிமுறைகளை மீறி மாடுகள் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்படுவதாக கடையம் நகர போலீசாருக்குத் தெரியவந்தது.
அதையடுத்து எஸ்.ஐ.ஈஸ்வரபிள்ளை, தலைமையில் போலீசார், மற்றும் தனிப்பிரிவு தலைமை காவலர் ரவி ஆகியோர் தலைமையில் மாட்டுச் சந்தைக்குச் சென்றனர்.
அது சமயம் மதுரையிலிருந்து பெரிய கண்டெய்னர் லாரியில் மாடுகளை அடைத்துக் கொண்டு வந்தது தெரிய வந்தது. மாடுகளைக் காற்றோட்டமில்லா கண்டெய்னரில் அடைத்துக் கொண்டு வந்தது பற்றி விசாரித்த போலீசார், கண்டெய்னர் லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர்.