Skip to main content

மாணவர்களின் உயிரைப் பறித்த அலட்சியம்; தனியார் காப்பக நிர்வாகிகள் கைது

Published on 09/11/2022 | Edited on 09/11/2022

 

Negligence that claimed the lives of students; Private ashram administrators arrested

 

திருப்பூர் மாவட்டம் அவினாசி ரோடு அருகே உள்ள ஸ்ரீ விவேகானந்தா சேவாலயம் சிறுவர் காப்பகத்தில் கடந்த அக்.5 ஆம் தேதி கெட்டுப்போன உணவைச் சாப்பிட்ட மூன்று சிறுவர்கள் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.  இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் திமுக அமைச்சர் கீதாஜீவன் மற்றும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட காப்பகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் நிர்வாகத்தின் அலட்சியம் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்திருந்தார்.

 

அதேபோல், திருப்பூர் காவல் ஆணையர் பிரபாகரன் செய்தியாளர்களிடம் பேசிய பொழுது, ''உணவுப் பாதுகாப்புத் துறை, காவல்துறை, வருவாய்த்துறை எல்லோருமே விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறோம். அவர்கள் சமைத்த ரசம், சாதம், ஊறுகாய் ஆகியவற்றை கலெக்ட் செய்துள்ளார்கள். பயன்படுத்தப்பட்ட குடிநீரைக் கூட ஆய்வுக்கு எடுத்துச் சென்றுள்ளனர். ஆய்வு முடிவுகள் என்னவாக வருகிறது என்பதைப் பொறுத்து தான் இதில் என்ன நடந்தது என்று சொல்ல முடியும்'' என்று கூறியிருந்தார்.

 

இந்த சம்பவத்தில் மாணவர்களுக்குக் கொடுக்கப்பட்ட உணவு மாதிரிகள் பரிசோதனைக்காக ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில், உணவுப் பகுப்பாய்வு சோதனையில் சம்பந்தப்பட்ட உணவில் நஞ்சு இல்லை என்பது தெரிய வந்தது. இதனையடுத்து, கவனக்குறைவாகச் செயல்பட்டதாகக் காப்பகத்தின் அறங்காவலர் மற்றும் பாதுகாவலர் உள்ளிட்ட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்