நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னையை சேர்ந்த மாணவர் உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை டாக்டர் வெங்கடேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டதை அடுத்த இன்னும் பல மாணவர்கள் நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜாமீன் கேட்டு உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்த நிலையில், அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மாணவனின் தந்தை வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தை பார்த்துவிட்டு ஆள்மாற்றட்டத்திற்கு திட்டமிட்டுள்ளது போல் உள்ளது என கூறிய நீதிபதிகள் தந்தைக்கு ஜாமீன் வழங்கினால் இந்த வழக்கின் விசாரணை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது எனவே தந்தை வெங்கடேசனுக்கு ஜாமீன் கொடுக்க மறுத்து, மாணவனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவருக்கு மட்டும் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்படுவதாக அறிவித்தனர்.
மேலும் மாணவர் உதித் சூர்யா தினமும் மதுரை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திடவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.