அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்னா தலைமையில் விவசாயிகள் குறை கேட்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது அதிகாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு அல்வா கொடுத்த விவசாயி தங்க சண்முக சுந்தரம் அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் நிறைவேற்ற மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் அளிக்க கூடாது என அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் கோரிக்கை வைத்தார்.
மேலும் அவர், ஹைட்ரோ கார்பன் திட்டம் தடை செய்ய வேண்டிய அவசியம் குறித்து கூறுகையில் அரியலூர் மாவட்டம் டெல்டா மாவட்டம் ஆகும். இந்த டெல்டாவை பாதிக்கக் கூடிய ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு இயற்கையான சாண எரிவாயு நிலையம் கிராமங்கள் தோறும் பொது இடங்களில் கட்டுமானம் அமைக்க வேண்டும். அதன் மூலம் அதிகளவில் மாடுகள், ஆடுகள் உள்ள அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் செயல்படுத்த முன் வரும் போது மாநில அளவில் வீடுகள் தோறும் இயற்கை எரிவாயு தந்த முதன்மையான மாவட்டம் என பெயரெடுக்கலாம்.
மேலும் இந்த மாதிரியான நடவடிக்கை மூலம் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க முடியும் இந்த வகையான சாண எரிவாயு நிலையத்திலிருந்து வெளி வரும் கழிவுகளை பயன்படுத்தும் போது சாதாரணமாக சாண கழிவுகளை பயன்படுத்தும் போது களை அதிகளவில் வரும் மாறாக, சாண எரிவாயு நிலையம் மூலம் வெளிவரும் கழிவுகளை பயன்படுத்தும் போது களை முழுமையாக வராத அளவிற்கும் களை மேலாண்மை செய்ய இயலும் மேலும் தரமான இயற்கை உரங்களை விவசாயிகளுக்கு அன்றாடம் வழங்க முடியும். இதன் மூலம் 100 சதவீத இரசாயனமற்ற வேளாண்மை செய்து நோயற்ற வாழ்வு உறுதி செய்யப்படும்.
100 ரூபாய் செலவில் மாதந்தோறும் சாண எரிவாயு மூலம் சிலிண்டர் கொடுக்க இயலும். மேலும் காய்கறி கழிவுகள், விவசாயக் கழிவுகள், மனித கழிவு மூலமும் மின்சாரம், இயற்கை எரிவாயு தயாரிக்கும் நிலையங்களை உருவாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிக்கிம் மாநிலம் போல் விவசாயிகளுக்கு ஊக்கமளித்து இயற்கை விவசாயத்தில் அரியலூர் மாவட்டத்தை முன்னோடி மாவட்டமாக கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை கோரிக்கை வைத்தார் தங்க சண்முக சுந்தரம்
மேலும் கூட்டதின் போது, அரசு அதிகாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் அல்வா கொடுத்து ஹைட்ரோ கார்பன் திட்ட த்திர்க்கு எதிர்பை பதிவு செய்தார் பின்புகூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகளும், மாவட்ட ஆட்சியரிடம் இந்த மண் இராஜேந்திரசோழன் ஆண்ட மண் இந்த மண்ணை காக்க வேண்டும் அரசும், அதிகாரிகளும் விவசாயிகளை ஏமாற்றுவதற்கு அல்வா கொடுப்பதுபோல ஹைட்ரோகார்பன் திட்டத்தை எங்கள் மீது திணித்து எங்களை ஏமாற்ற வேண்டாம் திட்டம் கைவிடப்பட வேண்டும் என்று ஒருமித்த குரலில் மாவட்ட ஆட்சியரிடம் எதிர்ப்பு தெரிவித்து கோரிக்கை வைத்தனர்.