இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நேற்று நடைபெற்றது. தமிழகத்தில் மட்டும் 1 இலட்சத்து 17 ஆயிரத்து 990 பேர் தேர்வெழுத விண்ணப்பித்து தேர்வெழுதினர். இதற்காக தமிழகம் முழுக்க 238 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. சென்னை மற்றும் புறநகரில் 45 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. கரோனா காரணத்தினால் தேசிய தேர்வு முகமை எனும் என்.டி.ஏ பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது அதில் முக்கியமானது. தேர்வெழுதவரும் மாணவர்கள் 11 மணிக்குள் தேர்வு மையத்துக்கு வர அறிவுறுத்தியிருந்தது. தேர்வு எழுதும் மாணவர்கள் பதட்டுத்துடன் இருக்க அவர்களைவிட அவர்களின் பெற்றோர்கள் அதிக பதட்டுத்துடன் இருந்தனர். குறிப்பாக மாணவர்கள் ஆவணங்களை எடுத்துகொண்டனரா, மாணவர்கள் மனநிலை சமநிலையுடன் இருக்கிறார்களா என எண்ணத்துடன் பதட்டத்துடன் இருந்தனர்.
தேர்வு மையத்துக்குள் செல்வதற்குமுன்பாக மாணவர்கள் தனிமனித இடவெளி, முகக்கவசம், தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை கண்டறிதல், எலக்ட்ரானிக் பொருள்கள் கண்டறியும் ‘மெட்டல் ஸ்கேனர்’ மூலம் பரிசோதனை என வழக்கமான பரிசோதனைக்களுக்கு பிறகு தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இது ஒரு பக்கம் இருக்க சென்னையில் நேற்று முழுக்க சாரல் மழை பெய்துகொண்டே இருந்தது. அதில் நனைந்தபடியே மாணவர்களும் பெற்றொர்களும் காத்திருந்தனர்.