நீட் தேர்வால் தற்கொலை செய்த மாணவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்திய ஸ்டாலினின் கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்தார்.
நாடு முழுவதும் நேற்று நீட் தேர்வு நடந்து முடிந்ததுள்ளது. சுமார் 15 லட்சம் மாணவர்கள் இந்தியா முழுவதும் இந்த தேர்வை எழுதினார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த நீட் தேர்வு காரணமாக ஒரே நாளில் தமிழகத்தை சேர்ந்த மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். இந்த விவகாரம் தமிழகத்தில் புயலை கிளப்பியுள்ளது. எதிர்க்கட்சிகள் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன. இந்ந சூழ்நிலையில் இன்று தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் நீட் தேர்வு தொடர்பாக இறந்த மாணவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால் அவரின் அந்த கோரிக்கையை சட்டப்பேரவை தலைவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனையடுத்து இறந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து பேரவையை நாளைக்கு சபாநாயகர் ஒத்திவைத்தார்.