Skip to main content

நீட் தேர்வுக்கு சென்ற தந்தை மகன்.. வழியில் விபத்து!!

Published on 14/09/2020 | Edited on 14/09/2020

 

 

NEET exam son father met accident
மாதிரி படம்

 

 

இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நேற்று நடைபெற்றது. தமிழகத்தில் மட்டும் 1 இலட்சத்து 17 ஆயிரத்து 990 பேர் தேர்வெழுத விண்ணப்பித்து தேர்வெழுதினர். இதற்காக தமிழகம் முழுக்க 238 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. சென்னை மற்றும் புறநகரில் 45 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.

 

கரோனா காரணத்தினால் தேசிய தேர்வு முகமை எனும் என்.டி.ஏ. பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது அதில் முக்கியமானது. தேர்வெழுதவரும் மாணவர்கள் 11 மணிக்குள் தேர்வு மையத்துக்கு வர அறிவுறுத்தியிருந்தது.

 

இந்நிலையில் நேற்று 11 மணிக்குள் மகனை தேர்வு மையத்துக்குள் அழைத்துசெல்ல வேண்டும் என முகப்பேரிலிருந்து சென்னை பல்லவன் சாலைக்கு வேகமாக வாகனத்தை இயக்கியுள்ளார் தந்தை. அப்போது எதிர்பாராதவிதமாக கிறுக்கே ஒரு மாடு வந்திருக்கிறது. அதன்மீது மோதி மகனும் தந்தையும் வாகனத்தில் இருந்து கீழே விழுந்தனர். இதில் தந்தைக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதிஷ்டவசமாக மகனுக்கு எந்த பாதிப்பும் காயமும் ஏற்படவில்லை. பின் தேர்வு மையத்துக்குவந்த அவர் தந்தைக்கு அங்கிருந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் முதல் உதவி செய்யப்பட்டது. பின் மாணவர் தேர்வு மையத்துக்குள் சென்றார். 

 

 

சார்ந்த செய்திகள்