முந்தைய காங்கிரஸ் மற்றும் திமுக அரசு கொண்டு வந்த நீட் தேர்வை ஏன் மத்திய அரசு திரும்பப்பெறக்கூடாது? என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் நீட் தேர்வு கொண்டு வந்த பிறகு பயிற்சி மையங்கள் மூலம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மருத்துவக்கல்லூரி கதவுகள் ஏழை மாணவர்களுக்கு திறக்காது என்பதே உண்மை. மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு செயல்பட வேண்டும். ஆசிரியர், நீதிபதி தனிச்செயலர்களின் ஊதியத்தை விட அரசு மருத்துவர்களின் ஊதியம் குறைவு. புனிதமான பணியை செய்யும், அரசு மருத்துவர்களுக்கு தகுந்த ஊதியம் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளன.
அப்போது தமிழக அரசு தரப்பில், தனியார் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்றவர்களே மருத்துவக்கல்லுரிகளில் சேர்ந்துள்ளனர் என்றும், முதல் முயற்சியில் நீட் தேர்வு எழுதி மருத்துவ இடம் பெற்றவர்கள் எண்ணிக்கை குறைவு என்றும் என வாதிட்டனர். இதனிடையே நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக நேரடியாக புகார்கள் வந்ததா என தெரிவிக்க மத்திய அரசுக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அமர்வு உத்தரவிட்டுள்ளது.