Published on 18/10/2020 | Edited on 18/10/2020
நீட் முறைகேட்டில் ஈடுபட்டதாக வெளியிடப்பட்ட பத்து பேரின் புகைப்படங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என ஆதார் ஆணையம் கைவிரித்துள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் ஆள்மாறாட்ட மோசடி தொடர்பாக சுமார் 100 புகைப்படத்தை வைத்து விவரங்களைத் தருமாறு பெங்களூர் ஆணையத்திற்கு சி.பி.சி.ஐ.டி காவலர்கள் கடிதம் எழுதி இருக்கின்றனர். 100 மாணவ மாணவிகளின் புகைப்படங்களை வைத்து விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் மோசடி தொடர்பாக சுமார் 15க்கும் மேற்பட்ட சி.பி.சி.ஐ.டி கைது செய்திருந்தது இந்நிலையில் நீட் முறைகேட்டில் ஈடுபட்ட பத்து பேரின் புகைப்படங்கள் கடந்த பிப்ரவரியில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் ஆதார் ஆணையம் இப்படி தெரிவித்துள்ளது.