Published on 29/10/2020 | Edited on 29/10/2020
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 7.5 % சதவீத உள் இட ஒதுக்கீடு மசோதாவை தமிழக அரசு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்திருக்கிறது.
ஒருமாதம் ஆகியும் ஆளுநர் இதற்கு இன்னும் ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று அமைச்சர், முதல்வர் உள்ளிட்டவர்கள் ஆளுநரை சந்தித்து வலியுறுத்தினார்கள். எதிர்க்கட்சிகள் இதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வற்புறுத்தி அளுநர் மாளிகை முன்பு போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு அளிக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.