Skip to main content

தமிழகத்தில் நவோதயா பள்ளி என்பது தேவையற்றது: கனிமொழி

Published on 16/09/2017 | Edited on 16/09/2017
தமிழகத்தில் நவோதயா பள்ளி என்பது தேவையற்றது: கனிமொழி

தமிழகத்தில் நவோதயா பள்ளி என்பது தேவையற்றது என கனிமொழி தெரிவித்துள்ளார்.

இது குறித்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

தொடர்ந்து நவோதயா பள்ளிகள் வரக்கூடாது என மு.க.ஸ்டாலின் உட்பட பலரும் சொல்லியுள்ள நிலையில் இந்த நவோதயா பள்ளி என்பது தேவையற்றது. தமிழக மக்களுக்கு என்று எதுவும் செய்யாத பிஜேபி அரசு இதில் மட்டும் ஏன் அக்கறை செலுத்துகிறது.

தமிழகக்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், கமல் வருவது வியப்பானது அல்ல. தன் உரிமைகளை பாதுகாக்க போரடுவதே தவறு என்பது கூடாது அவர்கள் உரிமையை பெற்றுத் தருவது அதே சமயம், அரசின் கடமை என்பதை மறந்துவிடக் கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

- முகில்

சார்ந்த செய்திகள்