ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு போகர் சித்தரால் உருவாக்கப் பட்ட நவபாசனமான ஞான தண்டாயுதபாணி சிலை தான் பழனி மலையில் உள்ள மூலஸ்தானத்தில் இருக்கிறது.இப்படிப்பட்ட நவப்பாசன சிலையை மறைத்து ஐம்பொன்சிலை வைத்ததில் மோசடி நடத்தியதின் பேரில் ஸ்தபதி முத்தையா உள்பட கோவிலில் பணிபுரியந்த சில அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதை சிலைதடுப்பு பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான காக்கிகள் கண்டு பிடித்து அதிரடி விசாரண நடந்து வருகிறது.
இந்தநிலையில் தான் போகரால் உருவாக்கப்பட்ட நவப்பாசன முருகன் சிலையை 205ஆண்டு காலம் பூஜைகள் செய்து வந்த புலிப்பாணி வம்சா வழிவந்த 13 வது பட்டம் பெற்ற பழனி மலை அடிவாரத்தில் உள்ள சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமியோ நவப்பாசன சிலைக்கு எங்கள் தலைமையில் பாதுகாப்பு குழு அமைக்க வேண்டும் என மதுரை ஐகோட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
இதுபற்றி சிவனாந்த புலிப்பாணி பாத்திர சுவாமியிடம் கேட்ட போது, போகர் சித்தரால் உருவாக்கப் பட்ட நவப்பாசன சிலைக்கு உரிமைபட்டவர்களும் உரியவர்களும் நாங்கள்தான் எனவேதான் அப்படிபட்ட நவப்பாசன ஞானதண்டாயுதபாணிக்கு எங்கள் தலைமையில் பாதுகாப்பு குழு அமைக்க வேண்டும் என கடந்த மாதம் அறநிலையத்துறைக்கு மனு கொடுத்தும் கூட எந்த ஒரு பதிலும் வரவில்லை. அதனால்தான் மதுரை ஐகோட்டில் மனு தாக்கல் செய்தோம். அதன்படி மனுவை விசாரித்த நீதிபதியும் கூட அரசு நவப்பாசன சிலையை பாதுகாத்துதான் வருகிறது பாதுகாப்புடனும் இருக்கிறது என்று கூறியுள்ளதே தவிர எப்படி பாதுகாக்கப்பட்டு வருகிறார்கள் என்ற விஷயத்தவே சொல்லவில்லை அதனால் மீண்டும் ரிட் மனு தாக்கல் செய்து கேட்க இருக்கிறோம்.
கடந்த 1984 முன்பு எல்லாம் அனைத்து பூஜைகளும் மூலவருக்கு செய்யப்பட்டு வந்தது அதன் பிறகு சிலை சேதாரமாகி வருகிறது என்று சொன்னதின் பேரில் தான் தற்பொழுது ஆறு கால பூஜைகள் மட்டும் செய்து வருகிறார்கள் ஆனால் அந்த நவப்பாசன சிலைக்கு பாதுகாப்பு என்பது கிடையாது அப்படி இருக்கும்போது கோர்ட்டும் அரசு சொன்னதை கேட்டு பாதுக்கப்பட்டு வருகிறது என்றால் யார் பாதுகாக்கிறார்கள் என்று தெரியவேண்டும்.
கோவில் இணை ஆணையரா?,குருக்களா?,பண்டாரங்களா?அல்லது கோவில் செக்யூரிட்டிகளா இப்படி யாருன்னு சொல்லாமலே கோர்ட்டும் அரசு சொல்வதை கேட்டு பதில் சொல்கிறதே தவிர நாளைக்கு ஏதாவது சிலைக்கு பாதிப்பு வந்தால் ஏற்கனவே கை கால் பழுந்தடைந்து விட்டது என கூறிவருகிறார்கள் அப்படி இருக்கும்போது மேலும் பழுதாகி கீழே விழுந்து விட்டது என சொன்னார்கள் என்றால் அதற்கு யார் பொறுப்பு. எனவேதான் எங்க வம்சா வழியினர் பாதுகாத்து வந்த நவப்பாசன சிலைக்கு எங்க தலைமையில் ஒரு அமைக்கவேண்டும் என கூறுகிறோம்.
அப்படி அமைந்தால் கோவில் அதிகிரிகள் முதல் அர்ச்சகர்வரை பயம் இருக்கும் அந்த நவப்பாசன சிலையை முறையாக பாதுகாப்பார்கள் இப்படிப்பட்ட நவப்பாசன சிலையை போகரை தவிர இனி யாரலும் உருவாக்க முடியாது. எனவேதான் பாதுகாப்பு குழு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.
ஐகோர்ட்டில் நியாயமான நீதி கிடைக்க வில்லை என்றால் சுப்ரீம் கோர்ட்டுக்கு போய் நவப்பாசன சிலையை பாதுகாக்க குழு அமைக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்த இருக்கிறோம் என்று கூறினார். ஆனால் புலிப்பாணி பாத்திர சுவாமிகள் கூறுவது போலவே பெரும்பாலன முருக பக்தர்களும் கூட அந்த நவப்பாசன முருகன் சிலையை பாதுகாக்க பாதுகாப்பு குழு அமைக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி வருகிறார்கள்.