Skip to main content

நாட்டுமாடுகள் கண்காட்சி: 100க்கும் மேற்பட்ட மாடுகள், குதிரைகள், நாய்கள், ஆடுகள் பங்கேற்பு

Published on 23/01/2018 | Edited on 23/01/2018

நாட்டுமாடுகள் கண்காட்சி:  100க்கும் மேற்பட்ட மாடுகள், 
குதிரைகள், நாய்கள், ஆடுகள், சேவல்கள் பங்கேற்பு

            கடந்த 20 ஆண்டுகளாக கலப்பின மாடுகளால் சத்தான பால் கிடைக்கவில்லை. உரம், பூச்சிகொல்லி மருந்துகளால் இயற்கை உணவுகளும் கிடைக்காமல் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு 20 வயது இளைஞன் கூட சிகிச்சையில் இருக்கிறான்.



 இந்த நிலையில் கடந்த ஆண்டு மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் ஆகியோரது மத்தியில் புரட்சியாக வெடித்த ஜல்லிக்கட்டு போராட்டம் இயற்கை உணவிற்கு ஆதரவாக திரும்பியது. அதன்பிறகு பாரம்பரிய தேடல்கள், நாட்டுமாடுகள் வளர்ப்பு போன்ற விழிப்புணர்வு இளைஞர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் நாட்டுமாடுகளை பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தமிழகத்தில் முதல் முறையாக தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள அணைக்காடு கிராமத்தில் நாட்டுமாடுகள் கண்காட்சி நடந்தது. 

இந்த கண்காட்சியில் உம்பளச்சேரி, காங்கேயம், புலிக்குளம், பர்கூர், தார்பார்கர், பூரணி உள்ளிட்ட 6 வகைகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நாட்டுமாடுகளும், காட்பாடி, வண்டிக்குதிரை உள்ளிட்ட வகைகளை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட குதிரைகளும், 25க்கும் மேற்பட்ட ஆடுகள், கன்னி, ராஜபாளையம், சிப்பிப்பாறை வகைகளை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட நாய்கள், 15 சண்டை சேவல்கள் என கண்காட்சியில் பங்கேற்றன. இந்த கண்காட்சியை பள்ளி மாணவர்கள் உள்பட 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்த்து அதோடு செல்பியும் எடுத்துக் கொண்டனர். இதில் சிறந்த பொளி காளைக்கும், வண்டி மாட்டிற்கும், சிறந்த பசுவிற்கும், குதிரைக்கும் வெள்ளி நாணயம், குத்துவிளக்கு ஆகியவை பரிசாக வழங்கப்பட்டது. இப்படிப்பட்ட கண்காட்சி மிகவும் அரிதாக நடத்தப்படுவதாகவும், மிகவும் பயனுள்ளதாகவும், நாட்டுமாடுகளை எக்காரணத்தை கொண்டும் அழியவிடக்கூடாது, அதை வளர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்பட்டதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

 -இரா.பகத்சிங்

சார்ந்த செய்திகள்