தேசிய வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு குழு (NDRF) நடத்திய இந்திய அளவிலான செயற்கைக்கோள் வடிவமைப்பு போட்டியை வலைதளம் (ஆன்லைன்) வாயிலாக நடத்தியது. இதில் செயற்கை கோளுக்கான பொருட்களை பரிந்துரைக்க வேண்டும். அது புதுமையாகவும், எளிமையானதாகவும் இருக்க வேண்டும். அந்த பொருள் 3.8 செ.மீ அளவிலான பெட்டியில் பொருந்தும் வண்ணம் அமைய வேண்டும் என்ற விதிமுறைகளை விதித்தது.
போட்டியில்இந்தியா முழுவதிலிருந்தும் ஏறத்தாழ 3000 பள்ளிகள் பங்கேற்றள்ளனர். தமிழகத்திலிருந்து 200-க்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கெடுத்த நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலுள்ள அரசு உதவிபெறும் ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களும் இதில் கலந்துகொண்டு பரிந்துரை செய்த பொருட்களில் இரண்டு தேர்வு செய்யப்பட்டது.
தமிழகத்திலிருந்து 6 குழுக்கள் தேர்வுபெற்ற நிலையில் சிதம்பரம்ஆறுமுக நாவலர் பள்ளி இரண்டு குழுக்களில் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. இதில் ஒரு பொருள் சிமெண்டால் கட்டப்பட்ட சுவரையோ, தளத்தையோ இடித்து நிலத்தில் .போடுவதால்அதன் மூலம் மழைநீர் மண்ணுக்குள் இறங்குவது தடுக்கப்படுகிறது. இதுவும் பிளாஷ்டிக் போல் மழைநீரை பூமிக்கு அனுப்பாது. அதனால் விண்ணுக்கு சிமெண்டை அனுப்பி அங்குள்ள மாற்றத்தை ஆராய்வதன் மூலம் இங்குள்ள கான்கிரிட் கழிவுகளை அழிக்கவோ மறுசுழற்சி செய்வதற்கான வழிகளை ஆராய்ச்சி செய்யும் நோக்கிலும் இரண்டாவது பொருள் பென்சிலின் என்ற உயிர் எதிர் பொருளை(ஆன்டிபயோடிக்) விண்வெளியில் தங்கி ஆராய்ச்சிகள் செய்யும் வீரர்களுக்கு தேவையான தடுப்பு மருந்துகள் புவியிலிருந்து இராக்கெட் மூலமாக அனுப்பப்படுகிறது.
மாற்றாக இத்தகைய உயிர் எதிர்பொருளை அங்கேயே உருவாக்க முடிந்தால் நேரம் மற்றும் பொருட்செலவு பெருமளவில் குறையும். இதற்கான ஆய்வுசெய்வதற்கு பென்சிலின் என்ற பூஞ்சை தேர்வு பெற்றது. தேர்வு செய்யப்பட்ட பொருட்களை விண்ணுக்கு அனுப்பும் நிகழ்ச்சி கடந்த 19-ந்தேதி வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில் தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன், சந்திரயான் திட்டஇயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, விஐடி பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன், என்டிஆர்எப் இயக்குநர் டில்லிபாபு உள்ளிட்ட இந்தியா அளவில் தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் இருந்து தேர்வு பெற்ற பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து என்டிஆர்எப் திட்ட இயக்குநர் டில்லிபாபு கூறுகையில் தேர்வு பெற்ற பொருட்களை ஹீலியம் காற்று நிரப்பட்ட பலுன் மூலம் விண்ணுக்கு அனுப்பபட்டுள்ளது. இது பூமியில் இருந்து 3 கி.மீ தூரத்தில் நிலைநிறுத்தப்படும். ஒரு மாதத்திற்கு பிறகு பாரஷீட் மூலம் எடுத்து வந்து விண்ணில் நடைபெற்ற மாற்றதினால் பொருட்களின் தன்மை குறித்து சம்பந்தபட்ட பள்ளி மாணவர்களுக்கு அறிக்கை அளிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
நிகழ்ச்சியில் பங்குபெற்ற தமிழகம் சார்பில் சிதம்பரம் ஆறுமுகநாவலர் பள்ளி மாணவர்கள் அதன் ஒருங்கிணைப்பாளர் வேல்பிரகாஷ் பள்ளியின் செயலாளர் அருள்மொழிச்செல்வன் உள்ளிட்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் வாழ்த்துகூறினார்கள்.