Published on 07/11/2020 | Edited on 07/11/2020
சென்னை எண்ணூர் கழிமுகப் பகுதிகளில் கழிவுகளைக் கொட்டிய வழக்கில், எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்கு விதிக்கப்பட்ட 8 கோடி ரூபாய் அபராதத்தை 4 கோடி ரூபாயாக குறைத்து, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை எண்ணூர் கழிமுகப்பகுதியில் கழிவுகளைக் கொட்டி சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தியதாக, காமராஜர் துறைமுக நிர்வாகத்திற்கு 8 கோடியே 34 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, தென்மண்டல தேசிய பசுமைத்தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து, காமராஜர் துறைமுகம் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம், துறைமுகத்துக்கு விதிக்கப்பட்ட 8.3 கோடி ரூபாய் அபராதத்தை 4 கோடி ரூபாயாக குறைத்து, இத்தொகையை இரண்டு மாத காலத்தில் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.