தேச பிதா மகாத்மா காந்தி பிறந்த நாளையொட்டி குமாி மாவட்டத்தில் உள்ள 95 ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் கருப்பாட்டூா் ஊராட்சியில் நடந்த கூட்டத்தில் கிராம மக்கள் ஆா்வத்துடன் கலந்து கொண்டனா்.
அந்த மக்கள், ஊராட்சியில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால் அடிப்படை வசதிகளின்றி கஷ்டப்படுவதாகவும் அதிகாாிகளிடம் கோாிக்கையை கொண்டு சென்றால் அதிகாாிகள் உதாசீனம் படுத்துவதாகவும் இதனால் உள்ளாட்சி தோ்தலை உடனடியாக நடத்த வேண்டுமென்றும் அந்த பகுதியில் இருக்கும் இரண்டு டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டுமென்று தீா்மானங்கள் போட அதிகாாிகளிடம் கோாிக்கை வைத்தனா்.
இதற்கு அதிகாாிகள் சம்மதிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் குமாி மாவட்ட ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் ஓருங்கிணைப்பாளா் தலைமையில் மக்கள் பக்கத்து ஊராட்சியான சாமித்தோப்பு ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட கலெக்டா் பிரசாந்த் வடநேராவை சந்திக்க சென்றனா். இதையறிந்த கலெக்டா் அங்கிருந்து செல்ல முயன்றாா்.
அப்போது அங்கு சென்ற கருப்பாட்டூா் ஊராட்சி மக்கள் கலெக்டரை வெளியே விடாமல் முற்றுகையிட்டு அவா்களின் கோாிக்கையை தீா்மானமாக போட வலியுறுத்தினாா்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.