20 ஆண்டுகளுக்குப் பின்னர் தங்களுக்குப் பட்டா கிடைத்த மகிழ்ச்சியில் நரிக்குறவர் இன மக்கள் நடனமாடி உற்சாகமடைந்த சம்பவம் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே நிகழ்ந்துள்ளது.
சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதியில் உள்ள நரிக்குறவர் மக்கள் 20 ஆண்டு காலமாக தங்களுக்கு வீட்டுமனை பட்டா வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில், சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்துள்ள கருக்குப்பட்டியில் ஏரிக்குச் சொந்தமான புறம்போக்கு நிலத்தில் தங்கி வந்த நரிக்குறவர் இன மக்களுக்கு தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.
தாரமங்கலத்தைச் சுற்றியுள்ள வேறு எந்த ஊராட்சியிலும் நரிக்குறவர் இன மக்களுக்கு இடம் கொடுக்காத நிலையில் அரூர்பட்டி ஊராட்சியில் நிலம் கொடுக்க ஏற்பாடு செய்ததற்காக நன்றி தெரிவிக்கும் வகையில் நடனமாடி தங்கள் நன்றியை வெளிப்படுத்தினர்.