தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. இதுவரை 50 சதவீத வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டுள்ளது. இதில் திமுக பெருவாரியான இடங்களைக் கைப்பற்றியுள்ளது. 140 மாவட்ட கவுன்சிலர்களில் திமுக 92 இடங்களிலும், அதிமுக 6 இடங்களிலும் முன்னணியில் உள்ளது. 1381 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் திமுக 365 இடங்களில் அதிமுக 57 இடங்களிலும் முன்னணியில் இருந்து வருகிறது. ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் பாமக 13, தேமுதிக 1, அமமுக 2 சுயேட்சைகள் 29 என முன்னணியில் இருந்து வருகிறார்கள்.
இந்நிலையில் இந்த தேர்தல் வெற்றி தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நாஞ்சில் சம்பத், " திமுக வானை நோக்கி உயர்கிறது; அதிமுக சசிகலா தலைமையை நோக்கி நகர்கிறது; பாஜகவிற்குப் பாடை தயாராகிறது.! வாழ்க வாக்காளர்கள்.!" என்று ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவரின் இந்த கருத்தை பலரும் ஷேர் செய்து வருகிறார்கள்.